Temples

ஸ்மார்ட்போன்களில் பொதுவாக ஏற்படும் பிரச்சனைகள்
மெதுவாக வேலை செய்வது பலரின் செல்போனில் உள்ளது. மொபைல் ஸ்டோரேஜை திறம்பட நிர்வகிக்கவும். ஒவ்வொரு சில நாட்களுக்கும் உங்கள் மொபைலை ரீஸ்டார்ட் செய்யவும். தேவைக்கு மீறி, ஏராளமான ஆப்களை இன்ஸ்டால் செய்வதை தவிர்க்கவும். இன்டர்நெட்டை பயன்படுத்தாதபோது, மொபைல் டேட்டாவை ஆஃப் செய்து வைக்கவும். தேவை இல்லாத நேரங்களில் ஸ்க்ரீன் ப்ரைட்னஸை குறைக்கவும். நீங்கள் பயன்படுத்தாத அல்லது பயன்படுத்த விரும்பாத ஆப்கள், தேவை இல்லாத புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அழித்து விடவும். ஸ்டோரேஜின் சுமையை குறைக்கலாம்.

பணி நேரம் முடிந்ததும் நிறுத்தும் புதிய தொழில்நுட்பம்
பணி நேரம் முடிந்ததும் வேலை செய்வதை நிறுத்திக்கொள்ளும்படியாக ஒரு சுட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம். தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங், பேலன்ஸ் மவுஸ் என்ற ஒன்றைத் தயாரித்துள்ளது. திட்டமிடப்பட்ட அலுவலக நேரத்திற்குப் பிறகு வேலை செய்வதை தவிர்க்கும் விதமாக இதனை உருவாகியுள்ளதால் அதிக நேரம் வேலை செய்வதைத் தடுக்கிறது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்த படைப்பாற்றல் மிக்க மவுஸ் அலுவலக நேரத்திற்கு மேல் வேலை செய்தால் நம்முடைய கை அசைவை வைத்து நகர்ந்து கொண்டே இருக்கும்படி வடிவமைத்துள்ளனர். balance maus

ஐபோன் பிரியர்களுக்கு ஆப்பிளின் மகிழ்ச்சித் தகவல்
ஆப்பிள் தனது சமீபத்திய தயாரிப்பாக ஐபோன் 14 மாடலை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த போன்கள் iPhone 14 / iPhone 14 Plus / iPhone 14 Pro / iPhone 14 Pro Max என 04 வகைகளில் சந்தையில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய போன் செயற்கைக்கோள் அடிப்படையிலான SOS செய்தியிடல் சேவையைக் கொண்டிருக்கும், மேலும் இந்த அம்சம் தற்போது அமெரிக்கா மற்றும் கனடாவில் மட்டுமே கிடைக்கும். ஐபோன் 14 இல் 48 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்படும் iPhone 14 மற்றும் 14 Plus ஐந்து வண்ணங்களிலும், iPhone 14 Pro மற்றும் Pro Max நான்கு வண்ணங்களிலும் சந்தையில் வெளியிடப்பட உள்ளன.

கடந்த 7 ஆண்டுகளில் முகப்புத்தக பயன்பாடு 32% வீழ்ச்சி
கடந்த 7 ஆண்டுகளில் முகப்புத்தக பயன்பாடு 71 சதவீதத்திலிருந்து 32 சதவீதமாக குறைந்து விட்டதாக அமெரிக்க இளைஞர்கள் மத்தியில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பியூ ரிசார்ச் சர்வே நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளிவந்துள்ளது. கடந்த 2014 - 2015ம் ஆண்டில் அமெரிக்க பதின்பருவத்தினர் (13 - 17) மத்தியில் முகப்புத்தக பயன்பாடு 71 சதவீதமாக இருந்தது. ஆனால், தற்போது அது 32 சதவீதமாகக் குறைந்துவிட்டது. உலகில் பலராலும் விரும்பி பார்க்கப்படும் முகப்புத்தகம் தற்போது பயன்பாடு மிகவும் குறைந்து வருகிறது.